உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

தமிழகத்தில் 7 அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் மைக்ரோ சாஃப்ட்
தமிழ் நாட்டில் 7 அரசு பள்ளிகளை தத்தெடுத்து, 500 அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் ஒப்பந்தத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு பள்ளிகளில் இலவச வைபை வசதி செய்து கொடுக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்னர் அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்தார்
See More
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளத. இலங்கை தமிழர்கள் இதனை கோலகலமாக கொண்டாடி வரும் நிலையில். தமிழகத்திலுள்ள மக்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர். ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக் நீரிணை பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் இருவரால், 1913-ம் ஆண்டு, கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுகிறது. இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட இந்த திருவிழா, அந்த போர் முடிந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெற்றது.
See More
மாலத்தீவில் இருந்து இரு நிருபர்கள் வெளியேற்றம்
அரசியல் குழப்பம் நிலவி வருவதால், மாலத்தீவில் தற்போது அதிபர் யாமீன் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள்., எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு என்ன நடக்கிறது என்று வெளியே உள்ளவர்கள் அறிய முடியாத சூழலில், ஏ.எப்.பி.,யின் இரு நிருபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து நிருபர்களாக பணியாற்றி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
See More
பாபுவா பழங்குடியின மக்களின் எதிர்காலத்திற்கு திட்டமிடும் இந்தோனீஷிய திருச்சபை
பாபுவா மாகாணத்தின் சத்தோலிக்க திருச்சபையும், மனித உரிமை குழுக்களும் இணைந்து பழங்குடியின மக்களின் எல்லைகளை குறித்துள்ளனர். இந்தோனீஷிய அரசு பாபுவா பழங்குடியின மக்களின் எல்லைகளை பாதுகாப்பதில் உதவுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி இதற்காக இணையதளம் ஒன்றை அவர்கள் தொடங்கியுள்ளனர். அதில், பழங்குடியினரின் எல்லைகள். இடங்கள் மற்றும் அகழ்வாய்வு, பனை மரங்கள் இருப்பவை என அனைத்து இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தோனீஷிய அரசு பழங்குடி இன மக்களின் நிலத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்களுடைய சுற்றுச்சூழலை பாதிக்கின்ற எந்தவொரு அனுமதியையும் வழங்க கூடாது என்றும் மிராவுகே உயர் மறைமாவட்டத்தின் நீதி, அமைதி மற்றும் படைப்புக்களின் ஒருங்கிணைப்பு பணிக்குழுவின் தலைவர் இயேசுவின் திருஇதய சபையின் அருட்தந்தை அன்செல்முஸ் அமோ தெரிவித்திருக்கிறார்.
See More
வியட்நாமில் கடும் தண்டனை பெற்றிருக்கும் கத்தோலிக்க செயற்பாட்டாளர்கள்
கடல் நீரை மாசடைய செய்யும் தைவான் இரும்பு ஆலைக்கு எதிராக நுற்றுக்கணக்கான மீனவர்கள் வழக்கு தொடுக்க உதவிய 2 கத்தோலிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குடிமக்களுக்கு சட்டப்பூர்வ நலன் மற்றும் உரிமைகளை வழங்கும் நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஜனநாயக சுதந்திரத்தை மீறியதாகவும், கடமையை செய்ய தடுத்ததற்காவும் 35 வயதான ஹோயாங் டுச் பின்க் என்பவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு செயற்பாட்டாளரான 38 வயதான நகுயன் நாம் பொங் என்பவர் அதிகாரப்பூர்வ கடமையை எதிர்த்தற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ம் தேதி விசாரிக்கப்பட்ட இவர்கள், கடும் சிறை தண்டனை பெற்றுள்ளதை அமெரிக்க உள்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.
See More
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரை நிறைவுஈ எதிர்பார்ப்பு அதிகரிப்பு
ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் தோ்தல் பரப்புரை நிறைவு பெற்றது. ஆா்.கே.நகா் இடைத் தோ்தலுக்கான பரப்புரைகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., சுயேட்சை வேட்பாளா் டிடிவி தினகரன், பா.ஜனதா, நாம் தமிழா் கட்சி என எல்லா தரப்பினரும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனா். வெளி நபா்கள் யாரும் அங்கிருக்கக் கூடாது என்பதால் விடுதிகள் உள்பட அங்குள்ள இடங்களில் தங்கியிருப்போர் வெளியேறி வருகின்றனர். செய்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 21ம் தேதி மாலை வரை சமூக வளை தளங்கள் உட்பட எந்த விதத்திலும், எந்த கட்சியையும் ஆதரித்தோ, கட்சிகள் மீது குறை கூறியோ விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
See More
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு மிரட்டல்
இந்தியாவில் அதிக மக்கள்தொகையுடைய உத்தரபிரதேச மாநிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விழா கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு வெளிப்படையாக மிரட்டல் கடிதத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பாரிஷெத் அமைப்பின் கீழ் செயல்படுகின்ற ஹிந்து ஜக்ரான் மான்ச் அமைப்பு அலிகா நகரிலுள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. பள்ளிகள் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடக் கூடாது என்றும், கொண்டாடினால் அந்த பள்ளியின் சுய ஆபத்து முயற்சியாக கொண்டாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பாடல்களை பாடி வாழ்த்து தெரிவித்த அருட்தந்தையரும், குரு மாணவர்களும் கைது செய்யப்பட்டது இந்த மாநிலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் பாரதிய னதா கட்சி ஆட்சி நடக்கும் நிலையில், உத்தரபிபரதேசத்திலும் அதே கட்சி ஆண்டு வருவதால், அனைத்து நிகழ்வுகளும் மத சாயம் பூசப்பட்டு, இந்து தீவிரவாதம் வளரும் வகையில் பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வருவதால், இந்தியாவில் மத சகிப்புதன்மை குறைந்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
See More
இந்தோனீஷியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணம் காட்டும் இளைஞர்கள்
பிரிவினைவாத பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில், வேறுபட்ட மத பின்னணிகளை சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் இந்தோனீஷியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தங்களுடைய அர்ப்பணத்தை தெரிவித்துள்ளனர். பௌத்தம், கன்பியூஸியனிசம், இந்து மதம், இஸ்லாம், சீர்திருத்த சபையினர் மற்றும் காபிரிபாடென் உள்பட பல பாரம்பரிய மத நம்பிக்கை குழுக்கள் இந்த இளைஞர் குழுவில் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 14 ஆம் தேதி இந்தோனீஷியாவின் ஆத்ம ஜெய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் ஜகார்த்தா வளாகத்தில், இந்த இளைஞர்கள் தங்களின் அர்ப்பணத்தை உறுதிமொழி எடுத்து கொண்டனர். உரையடல் மூலம் அமைதியின் முகவர்களாக வலம் வருவோம் என்று அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
See More
கருச்சிதைவு ஆண்டு நினைவில் புலம்பும் ஆயர்கள்
கருத்தடை சட்டம் உருவாக்கப்படப்பட்டு 50 ஆண்டு நிறைவை அடையாப்படுத்தும் வகையில் கருச்சிதைவு பற்றிய திருச்சபையின் அரியதொரு அறிவிப்பு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆயர்களிடம் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு கருச்சிதைவும் ஒரு சோகம் என்றும், 2015 ஆம் ஆண்டு மட்டும் 2 லட்சம் கருச்சிதைவுகள் செய்யப்பட்டிருப்பது சோகமானது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர். மனித வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடு பற்றிய புதிய புரிதல் சமூகத்திற்கு அவசியமாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
See More
முதல் பீட்ஸா டெலிவரி 10 நூற்றாண்டில் கத்தோலிக்க ஆயருக்கு என்று தெரியுமா?
பிட்ஸா என்றால் இன்று அனைவரும் உண்பதற்கு விரும்புகின்ற உணவாக மாறிபோய்விட்டது. இது இத்தாலியின் நேபிள்ஸ் நகரத்தில் முதல்முதலாக உருவானது. இதனுடைய வரலாறு பல நூற்றாண்டுகளுக்க பின்னால் செல்கிறது. பல்வேறு கட்டங்களை கடந்து வந்து, இன்று நாம் சாப்பிடும் பிட்ஸாவாக பரிணமித்து வந்துள்ளது என்றால் மிகையாகாது. பீட்ஸா முன்பதிவு செய்யப்பட்டு முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று வரலாற்றை ஆய்ந்து பார்த்ததில், அது 10 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆயர் ஒருவருக்கு பீட்ஸா வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கான உரிய ஆதாரங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
See More