உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

உலக செய்தி விவரங்கள்

NEXT

5 கோடி யூரோ மோசடி: முன்னாள் வத்திக்கான் வங்கி தலைவர் மீது வழக்கு

வத்திக்கான் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் அவருடைய வழக்கறிஞர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை வத்திக்கான் வழங்கறிஞர்கள் சுமத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் 5 கோடி யூரோவுக்கு அதிகமான இழப்புக்கு காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சலோ கலோயா மற்றும் அவருடைய வழக்கறிஞர் மீதான வழக்குகள் மார்ச் 15ம் தேதி தொடங்கியுள்ளன. மூன்றாவது சந்தேக நபர் புனலாய்வு நடைபெறும்போதே இறந்துவிட்டார். வத்திக்கான் வங்கி கணிசமான நிலத்தை விற்றுவிட்ட 2001 முதல் 2008 வரையான காலத்தில் பண மோசடியும், சுய நிதி மோசடிகளிலும் ஈடுபட்டதாக இவர்கள் மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் திருச்சபையின் சொத்துக்களை இவர்கள் விற்றுள்ளனர். அந்த நிறுவனங்கள் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் அவற்றை விற்று லாபம் அடைந்துள்ளன. வாங்கிய மற்றும் விற்ற விலையிலான வித்தியாசத்தால், இந்த சந்தேக நபர்கள் தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது இழப்புகளில் கொஞ்சம் தொகையாவது மீட்டு எடுப்பதற்காக குற்றவியல் வழக்கு நடைபெறுகின்ற வேளையில், சிவில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது.