உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

இலங்கை செய்தி விவரங்கள்

NEXT

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கினார் மைத்திரி

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் முன்னரே இராணுவத்தினரிடம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதாக த.தே.கூட்டமைப்புக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, வடக்கு, கிழக்கில் படையினர் வசம் உள்ள அனைத்து தனியாருக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அன்று அவர் வழங்கிய எழுத்து மூல உறுதிமொழிக்கு அமையவே, தற்போதைய அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.