உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

மத வழிபாட்டு இடங்களை பாதுகாக்க இந்திய ஆயர்கள் அழைப்பு

எல்லா சமூகத்தினரின் வழிபாட்டு இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கேட்டுகொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கத்தோலிக்க ஆலயம் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் குன்டபால்லி கிரமத்தில் இருந்த பாத்திமா அன்னை தேவாலயம் மீது மே மாதம் 21 ஆம் நாள் சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கட்நத மே மாதம் ஹைதிராபாத் உயர் மறைமாவட்ட பேராயர் தும்மா பாலா அர்சித்த புதிதாக கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் இருந்த இயேசு கிறிஸ்து, அன்னை மரியாள், சிலுவைகளை உடைத்ததோடு மர சாதனங்களை இந்த கும்பல் நாசப்படுத்தியுள்ளது. “இந்த நாட்டில் நடைபெறுபவற்றை எண்ணி கவலையடைகிறோம். நாட்டை குறைசொல்லவில்லை. தீய சந்திகள் இத்தகைய நிலைமைகளை உருவாக்குவது நாட்டிற்கு நல்லதல்ல” என்று இந்திய ஆயர்கள் பேரவையின் பொது செயலாளர் தியோடோர் மாஸ்கார்ன்ஹாஸ் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொருவரும் அடுத்தவரின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது அவசியம் பிறரது வழிபாட்டு இடங்களை சேதப்படுத்துவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்