உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

முன்னாள் போதை மருந்து அடிமைகளின் பாதங்களை கழுவிய கர்தினால் டேக்லா

கடந்த வாரம் பெரிய வியாழக்கிழமை நடைபெற்ற பாதங்கழுவும் சடங்கின்போது, மணிலாவின் கர்தினால் லுயிஸ் அன்டோனியோ டேக்லா முன்பு போதை மருந்துக்கு அடிமையாக இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றத்திற்கு புறம்பாக கொல்லப்பட்வரின் தாய் ஆகியோரின் பாதங்களை கழுவி, துடைத்து, முத்தமிட்டுள்ளார். “இங்கு நாம் அடுத்தவரை தீர்ப்பிட வரவில்லை. ஆனால், இயேசு செய்ததை நினைவுகூர வந்துள்ளோம் என்று தெரிவித்த மணிலாவின் கர்தினால், அடுத்தவரை தீர்ப்பிடாமல். அனைவருமே பாவிகள் என்பதை நினைவில் வைத்திருக்க நினைவூட்டியுள்ளர். “நாமும் அவர்களை போன்றவர்களே” என்று கர்தினால் டேக்லா ஆண்டவரின் இராவுணவு திருப்பலி நினைவான பெரிய வியாழக்கிழமை திருப்பலியில் மறையுரை ஆற்றியபோது தெரிவித்தார். “இயேசு கழுவி சுத்தம் செய்ய வேண்டிய கறைபடிந்த பாதங்களை நாம் அனைவரும் கொண்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். “நீங்களும் சென்று அவ்வாறே செய்யுங்கள்” என்று இயேசு போதித்த செயல்பாடுகளை அடையாளமாக நிறைவேற்றுவதே புனித வியாழக்கிழமை நடைபெறும் திருச்சடங்குகள்.