அரிவாள் செல் இரத்தசோகை விழிப்புணர்வு தினம் | ஜுன் 19

அரிவாள் செல் இரத்தசோகை விழிப்புணர்வு தினம்
    

அரிவாள்செல் சோகை அல்லது அரிவாள் உயிரணுச் சோகை அல்லது சிக்கில் நோய் (ளுiஉமடந உநடட னளைநயளந (ளுஊனு) என்பது ஒரு மரபணுவால் வந்த ஒரு இரத்தக் கோளாறு நோயாகும்.ஜ2ஸ இதில் மிகவும் பொதுவான கோளாறின் வகையாக அரிவாள்செல் சோகை என அறியப்படுகிறது. இந்தச் கோளாறு உள்ளவர்களுக்கு செங்குருதியணுக்களில் இயல்பான எண்ணிக்கையில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு தென்படுவதில்லை. அதனால், சீரான இரத்த ஓட்டமில்லாமல், போதுமான ஆக்சிசன் கிடைக்காமல் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் தங்களின் செயல்திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் இரத்தச் சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் அரை வட்டமாக, அரிவாள் போன்று இருக்கும். அரிவாள்செல் சோகையின் சிக்கல்கள் பொதுவாக 5 முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் தொடங்குகின்றன. இதனால் வலி ஏற்படுதல் (அரிவாள் செல் நெருக்கடி), அனீமியா, கைகள் மற்றும் கால்களில் வீக்கம், பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் உருவாகலாம். நோயிக்கு ஆளானவர்களுக்கு வயது ஏறும்போது நாட்பட்ட வலி ஏற்படலாம். வளர்ந்த நாடுகளில் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும்.