ஆறுதலின் கடவுள்

அப்பெண் மறுமொழியாக, “ஆம், நலமே” என்றார். பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், “அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்து விட்டார்” என்றார் - 2 அரசர்கள் 4:27.

சூனேம் பெண்ணுடைய ஒரே மகன் இறந்து விட்டான். ஆனால் அவருடைய கணவர் கேட்கும்போது கூட மகன் இறந்ததை அவர் சொல்லவில்லை. இறைவாக்கினர் எலிசாவுடைய வேலைக்காரனாகிய கேகசி விசாரிக்கும்போதும், சுகந்தான் என்று சொல்கிறாரே அல்லாமல், தன்னுடைய உள்ளத்தின் துக்கங்களை அவள் சொல்லவில்லை. கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், “அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது என்கிறார்.

அந்த பெண் தனக்கு ஓர் ஆசீர்வாதமாய் ஒரு பிள்ளையைக் கொடுத்த கடவுள் அந்த ஆசீர்வாதம் வீணாய்ப்போக விடமாட்டார் என்று விசுவாசித்தார். குழந்தை இறந்த பின்னும் யாரிடமும் இறந்த செய்தியை சொல்லவில்லை. நலமுடனிருக்கிரான் என்று சொல்லும் அந்த பெண்ணின் நம்பிக்கையின்படியே; அவள் வாழ்க்கை ஆசீர்வாதமாக  மாறிற்று. மகன் உயிருடன் எழுப்பப்பட்டான்.

இந்த நாட்களில் ஆண்டவர் நம்மை பார்க்கிறார். நம் உள்ளம்  துக்கத்தால் நிறைந்திருக்கிறதைக் காண்கிறார். ஆறுதலின் கடவுள் எல்லாவற்றையும் நமக்கு  சுகமாய் மாற்றித்தருவார். நாம் பட்ட ஒவ்வொரு துன்பத்தையும் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களையும், தோல்விகளையும், நம் கண்ணீர்த்துளிகளையும்கூட ஆண்டவர் வெற்றியாக மாற்றித் தருவார். 

ஜெபம்: ஆண்டவரே, எங்களை முற்றிலுமாக உம்மிடம் ஒப்படைகிறோம். உலகிலுள்ள அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். உலகத்தை இந்த அச்சத்தின் பிடியிலிருந்து காத்தருளும். உயிர்த்த இயேசு விட்டுச்சென்ற சமாதானமும் அமைதியும் எங்கும், எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிலவ அருள்புரியும். ஆசீர்வதியும். ஆமென்.