இவ்வளவு பலமா !

என் மக்கள் அமைதிசூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர் - எசாயா 32:18. நம்முடைய கடவுள் சமாதானத்தின் கடவுள். சுற்றுசூழ்நிலை கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, அடுக்கு அடுக்காய் துன்பங்கள் சூழ்ந்து வரும்போது, மூழ்கி போகிறது போன்ற நிலையில்கூட  ஆண்டவர் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கிறவர்கள்  சமாதானத்துடன் காணப்படுவார்கள்.

அவர் காற்றையும், கடலையும் அதட்டி அமரப் பண்ணுகிறவர். அவர் நமக்கு உதவி செய்வார். பூரண சமாதானத்தை நமக்கு தருவார். நாம் பிரச்சனைகளை எண்ணி கலங்கித் தவிக்காமல், ஆண்டவரை சார்ந்து, அவரை பற்றிக் கொள்ளவேண்டும். நம்முடைய பாரங்களை அவர் மேல் இறக்கி வைத்து, அவரிடம் இளைப்பாறக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது ஒரு நிறைவான  அமைதி  நம் உள்ளத்தை நிரப்பும். 

"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; கடவுளிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள்.  என்னிடத்திலும் விசுவாசம் கொள்ளுங்கள்"  என்று இயேசு சொன்னார். நம்முடைய சந்தோசத்திற்க்காக  அவர் முள்முடி சூட்டப்பட்டார். கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் துளைக்கப்பட்டார். கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காக சிந்தினார்.  அவர் நம்மை கை விடுவாரா? நிச்சயமாக மாட்டார். நாம் நிறை வாழ்வு வாழ்வோம். நமக்கு அமைதியான வாழ்வு கிடைக்கும் . 

செபம்: ஆண்டவரே, சமதானதோடு போ என்று சொல்லி எங்களை அசீர்வதியும். உம் சன்னிதில் நிறைவான மகிழ்ச்சியும் சமாதானமும் காண அருள்புரியும். தோல்வியோ, போராட்டங்களோ, வறுமையோ எதுவும் உம் அன்பிலிருந்து எங்களை பிரிக்காது காத்தருளும்.  ஆமென்.