சோர்வடையது மன்றாட ...

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம் - செப்பனியா 3:16. அமலேக்கியருக்கும், இஸ்ரயேலருக்கும் ஏற்பட்ட போரில் வெற்றியை பெறுவதற்காக, மோயிசன் கடவுளிடம் வேண்டினார். அவருடைய  கைகள் தளர்ந்த போதெல்லாம்  ஊரும் ஆரோனும் அவரது இரண்டு கைகளைத் தாங்கி பிடித்து அவரது செபத்துக்கு துணையாயிருந்தனர். அவர் கைகள் தளர விடாது செபித்ததால் இஸ்ராயேலர் வெற்றி பெற்றனர்.  

பல வேளைகளில் நாம் மிகவும் சோர்ந்து போனவர்களாய் ஆகிவிடுகிரோம். நம்மிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாது இருந்தால் நல்ல பலனை பெறுவோம். கடவுளாகிய ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார்.அவர் மாவீரர்.  மீட்பு அளிப்பவர்; நம் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால்  புத்துயிர் அளிப்பார். நம் கைகளைத் தளரவிடாது, உள்ளத்தை சோர்ந்து போகவிடாது, பயத்துக்கும், கலக்கத்துக்கும் இடங்கொடாது செபிப்போம்.

செபம்: ஆண்டவரே உம்மையே நம்பி இருக்கிறோம். நாங்கள் இருக்கிற பலத்தோடு உம் ஆவியாரின் துணையோடு மனம் தளராது உம்மை இன்னும் அதிகமாக பற்றி கொள்ள அருள் தாரும். விசுவாச ஓட்டத்தில் சோர்ந்து போகாது இன்னும் பலப்பட அருள் புரியும். விண்ணக வாழ்வை பெற்று கொள்ள எங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்கும். ஆமென்.