தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 4

1.தேசீய நாள் இல்லாத நாடு

ஒவ்வொரு நாடும் தேசீய நாள் - சுதந்திர நாள் விடுதலை நாள் எனக் கொண்டாடும். இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் எனக் கொண்டாடுவதை அறி வோம். ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சீனப்புரட்சி நாள் அந்த நாடுகள் தேசீய தினமாகும் இப்படி தேசீய தினமே இல்லாத நாடு இங்கிலாந்து - மற்றது போப் ஆண்டவர் வாழும் வாடிகன் நாடு.

2.புதுக்கவிதை

அமெரிக்காவில் வால்ட் விட்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது தமிழில் புதுக்கவிதைக்கு ஆசான் நா.பிச்சமூர்த்தி, பிறகு பாரதி வசனக் கவிதை என ஆரம்பித்தார் இன்று மேத்தா நா.காமராசன். இன்குலாப், அப்துல் ரகுமான். வைரமுத்து எனப் பலரும் புதுக்கவிதை நாயகர்களே போன ஷோவ்வா ஆகபட் எப்படி வந்துசனுட பாக்கலாம்து சொன்னேன்ட் வாஙக பாக்கலாம்.

3. ஆகஸ்ட் 31

ஜனவரி 31, பிப்ரவரி 28 (29), மார்ச் 31, ஏப்ரல் 30, மே 31, ஜூன் 30 என மாத நாட்கள் ஒரு மாதம் 31, மறு மாதம் 30 என ஆண்டின் 365 நாட்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஜூலை ஆகஸ்ட் இந்த இரண்டுமாதமும் தொடர்ந்து 31 நாட்கள் வருவது ஏன் தெரியுமா? ஜூலை என்பது ஜூலியஸ் சீசர் நினைவாக வைக்கப் பட்ட பெயர் அப்போது ஜூலைக்கு 31 நாட்கள் அடுத்த மாதம் 30 நாட்கள் என்றே இருந்தன. ஜூலியஸ் சீசருக்குப் பின் வந்த அகஸ்டஸ் சீசர் தன் பெயரை அடுத்த மாதத்திற்கு குட்டி, ஆகஸ்ட் வந்தது. அதில் செருக்கு (ஜூலை) இணையாக தன்பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதத்திற்கும் 31 நாட்கள் ஆக்கினார். அதாவது பிப்ரவரியில் இருந்து 1நாளை எடுத்து இம்மாதத்தில் சேர்த்தார்.

4. தமிழ் உரைநடை

ஆரம்பகாலத்தில் இருந்து தமிழில் எல்லாமே செய்யுள் வடிவத்திலேயே எழுதப்பட்டது. உரை நடையின் தந்தை வீரமா முனிவர் இவர் எழுதிய பரமார்த்தகுரு கதை முதல் கதை எனலாம்.

5.மைசூர்

கர்நாடக மாநிலத்தில் அழகான நகர் மைசூர் பிருந்தா வனம் அரண்மனை உள்ள நகர். இதன் முன் பெயர் 'மகிஷாசுர நகர்'. இதுவே மருவி மைசூர் ஆனது. சாமுண்டீஸ்வரி கோவில் இங்குள்ளது.மகிஷாசூரானை தேவி அழித்த இடம் இது என்பதால் இப்பெயர் பெற்றது என்பது.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.

SHOW LESS