தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 6

1.கோவிலில் தேசீயக்கொடி சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாளில் தேசீயக்கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது வழக்கம். தேசீயக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து, மேளதாளத்துடன், பிரதான கோபுரத்திற்கு எடுத்து வரப் பட்டு,தீட்சிதர் ஒருவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகஸ்ட் 15-ல் ஏற்றப் படுகிறது. இதுபோல் வேறு கோவில் களில் கொடி ஏற்றப்படுவதில்லை.+

2. நீராவி என்ஜின் இப்போதுதான் டீசல் இரயில், மின்சார இரயில். ஆரம் பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது நீராவி இரயில்தான். இந்த நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தவர் ஸ்டீவன்ஸன். இவர் இதனைக் கண்டுபிடிக்க அடிப்படை என்ன தெரியுமா? அவர் வீட்டில் கெட்டில் ஒன்றில் வெந்நீர் நீராவியால், மேலே மூடியிருந்த தட்டைத் தள்ளி அது கீழே விழுந்த நிகழ்ச்சிதான். இதில் இருந்து நீராவிக்கு தள்ளும் சக்தி உண்டு எனக் கண்டு, அதன் மூலம் ஒரு இன்ஜினை இயக்கலாம் எனக் கற்பனை செய்தார் அதுவே புதிய கண்டுபிடிப்புக்கு வித்தானது.

3 இந்தியா கேட் இரு ஒரு வரலாற்றுச் சின்னம். டெல்லியில் உள்ளது. முதல் உலகப் போரில் இங்கிலாந்து நாட்டிற்காக, இந்தியாவில் இருந்து சென்று போரிட்டு மாய்ந்த 90000 இந்திய வீரர்கள் நினைவாகக் கட்டப்பட்டது. இது 42 மீட்டர் உயரம் உள்ளது. 90000 வீரர்களின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அணையா விளக்கு, கலர் விளக்குகள், நீரூற்றுகள் என அழகு படுத்தப்பட்டுள்ளது.

4 பிறந்தாள் இறந்த நாள் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரே நாளாக அமைவது அதிசயம் அபூர்வம். ஹெலன் கெல்லர் பிறந்தது 27-6-1880. இறந்தது 27-6-1968. தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் 30.10.1908 இறந்த நாள் 29.10.1963. ஏறத்தாழ சமம். ஒருநாள் முன்பாக இறந்தார்.

5 நீண்ட கடற்கரை நாடு கடற்கரைப்பகுதி அதிகம் கொண்ட நாடு கனடா (வடஅமெரிக்கா). இங்கு இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கடற்கரை உள்ளது.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.

SHOW LESS