பிறரால் நமக்கு வரும் ஆசீர்

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன் - செக்கரியா 9:12. யோபுவைப் போல, துன்பங்களின் பாதையிலே நடந்த, வேறொருவரை பார்க்க முடியாது. அலகை யோபுக்கு எதிராக சூழ்ச்சி செய்து, யோபுவை பயங்கரமாக சோதித்தது, வீட்டை இழந்து, பிள்ளைகளை இழந்து, மனைவியின் வெறுப்புக்கு ஆளாகி பெரும் துன்பப்பட்டார்.   

யோபின் உடலெல்லாம் புண்கள். அவர் ஒரு ஓட்டை எடுத்து, தன்னை சுரண்டிக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தார். ஆனாலும் ஆண்டவர் மேலுள்ள நம்பிக்கையை யோபு விட்டுவிடவில்லை. "அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை" என எடுத்துரைப்பதில் நான் தளரேன் இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்; ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வரமுடியாது என்று யோபு சொன்னார்.

யோபு தன் நண்பர்களுக்காக வேண்டியபோது, ஆண்டவர் அவரது சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும், இரண்டு மடங்காக கொடுத்தார்.

நாமும் சோதனை நேரங்களில், தூய ஆவியானவரின் துணையை நாடுவோம். அவர் நமக்கு உதவி செய்வாரே தவிர, நம்மை அழிய விடமாட்டார். நம்பிக்கையோடு காத்திருந்தால் இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை நாம் நிச்சயமாக பண்ணுவோம். 

செபம்: ஆண்டவரே, தூய ஆவியாரே, எங்களுடைய துன்ப வேளையில் எங்களோடு இரும். நாங்கள் சோர்ந்து பேகாதபடி எங்களை பலப்படுத்தும். நாங்கள் இழந்த ஆசீர்வாதங்களை எங்களுக்கு இரண்டு மடங்காக பெற்று இன்னும் நம்பிக்கையில் வளர அருள்புரியும். ஆமென்.