உலக ஆசிரியர்கள் தினம் | அக்டோபர் 05 | Veritas Tamil

தன்னையே உருக்கி மாணவர்களுக்கு கல்வி ஒளி தரும் மெழுகு வர்த்திகள் ஆசிரியர்கள், இவர்களே வருங்கால தலைமுறையினரை வடிவமைக்கிறார்கள் என்ற கருத்தை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்தியா அளவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம், உலகளவில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாக அக்டோபர் 5 ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) 1994 -ம் தொடங்கப்பட்டது.

 “ஆசிரியர்களிடம் இருந்து மலரும் கல்வியின் மாற்றம்” என்பதே 2022-ம் ஆண்டு உலக ஆசிரியர் தினத்தின் மையபொருளாகும். யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெறும் மூன்று நாள் கொண்டாட்டத்தில் ஆசிரியர் மேம்பாட்டுக்கான யுனெஸ்கோவின் ஹம்தான் பரிசு வழங்காக்கப்படும், ஆசிரியர்களின் பணி நிலைமைகள், தொழில்முறை மேம்பாட்டுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அந்தஸ்து ஆகியவற்றை எவ்வாறு உறுதிப்படுத்துவது உறுதிப்படுத்தும் நாளாக அமைகிறது.