உலக கவிதை தினம் | March 21 | World Poetry day

        ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 1999 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியை உலக கவிதை தினமாக அறிவித்தது. முதல் முறையாக, கவிதை தினம் 1938 இல் அமெரிக்க மாநிலமான ஓஹியோவில் தோன்றியது. கவிஞர் டெஸ்ஸா ஸ்வீஸி வெப் என்பவரால் தொடங்கப்பட்டது. பண்டைய ரோமானிய கவிஞர் விர்ஜிலின் பிறந்தநாள் அக்டோபர் 15 அன்று விடுமுறை நடந்தது. 1951 ஆம் ஆண்டில், 38 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் மெக்சிகோவில் தேசிய கவிதை தினமாக கொண்டாடப்பட்டது.
        முதல் கவிஞர் அக்காடியன் இளவரசி என்ஹெடுவானா ஆவார், அவர் கிமு 23 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். 18 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சீன பேரரசர் கியான்லாங், சோகமான கவிதைகளின் ஆசிரியர்களை தூக்கிலிட்டார். இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவிதை வாசிப்பது மூளையை செயல்படுத்துகிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
        கவிதை என்றதும், உடன் நினைவுக்கு வருவது காதல் தான். கவிதை எழுதத் தெரியாதவர் கூட காதலித்து விட்டால் கவிஞர் ஆகி விடுவர். சிந்திக்க தொடங்கிவிடுவர், அந்த ஒருவரை மட்டும். ஆனால் கவிதை காதலர்களுக்கு மட்டும் அல்ல. நாட்டிற்காக கவிதை எழுதினார் பாரதியார். புரட்சிக்காக கவிதை எழுதினார் பாரதிதாசன். இறைவனுக்காக, தந்தைக்காக, தாய்க்காக. எப்படி எவருக்கு வேண்டுமானாலும்; கவிதை எழுதலாம்.
        பல நாடுகளில் பேச்சு நாகரிகம் கூட சரியாக இல்லாத காலத்தில் சங்கம் வளர்த்து கவிதை பாடிய மொழி நம் தமிழ் மொழி. அறம் பற்றியும் புறம் பற்றியும் கவிதை வடிவில் பல வரலாற்று உண்மைகளை கவிதை வழியாக அக்கால கவிஞர்கள் எழுதியிருந்தனர். அரசர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழகத்தின் வளம் குறித்தவை மெய்கவிதைகள் வழியாகவே கிடைத்த வரலாறு என்றால் அது மிகையல்ல. வர்ணிக்கும் பொருட்டு கவிதையில் பொய் கலக்கலாம். ஆனால், மெய்கவிதைகள் தான் என்றுமே வரலாறாகவும், கல்வியாகவும் விளங்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
        இலக்கிய அமைப்புகள் மற்றும் கவிஞர்களின் திறனையும் செயல்பாட்டையும் ஊக்கப்படுத்தும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் விதத்திலும் உலக கவிதை தினத்தைக் கொண்டாட யுனெஸ்கோ கேட்டுக்கொண்டது.