சர்வதேச நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நாள் | may 4

        நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்புப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நாள் அனுசரிக்கப்படுகின்றது.
        பூமியில் மிகப் பரவலாகக் காணப்படும் புதைபடிவ எரிபொருள் நிலக்கரி ஆகும். நிலக்கரி சுரங்கம் என்பது பூமியிலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் ஒரு செயல்முறையாகும். இந்தியாவில் சுரங்கத் தொழிலானது 1774 ஆம் ஆண்டில் தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியாவின் வணிக ரீதியிலான மின்சார ஆற்றல் நிலக்கிரியினால் பூர்த்தி செய்யப்படுகின்றன.